திருக்கோவிலூர் அருகேரூ.70 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி :தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு

திருக்கோவிலூர் அருகே ரூ.70 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணியை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தாா்.

Update: 2023-09-12 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தபோவனம் முதல் காட்டு கோவில் வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் உள்ள இருவழிப்பாதை சாலை நான்கு வழி பாதை சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ரூ. 70 கோடி செலவில் நடந்து வரும் இந்த பணி தற்போது நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இந்த பணியை நெடுஞ்சாலை துறையின் மாநில அளவிலான கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்பு துறை தலைமை பொறியாளர் ஆர் .சந்திரசேகர் நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது, எஞ்சியுள்ள பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின் போது, அந்த பகுதியில் சாலையோரம் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். ஆய்வின் போது, திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்பு துறை எஸ்.பழனிவேல், கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் கே. முரளி, திருவண்ணாமலை தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் ஞானவேல், திருக்கோவிலூர் உதவி கோட்ட பொறியாளர் கே.சிவசுப்பிரமணியன் மற்றும் உதவி பொறியாளர் பு.புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்