சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாகனம்

திருவண்ணாமலையில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2022-09-12 16:34 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாகனம் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மத்திய பஸ் நிலையத்தில் இந்த விழிப்புணர்வு வாகனம் மூலம், கடைபிடிக்க வேண்டிய சாலை போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து இந்த விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் பல்வேறு பொது இடங்கள், பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், அரசு போக்குவரத்து கழக திருவண்ணாமலை மண்டல துணை மேலாளர் (வணிகம்) நடேசன், துணை மேலாளர் (தொழில்நுட்பம்) துரைராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரா,

முதுநிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் பொன்.சேகர், தாசில்தார் எஸ்.சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்