சாலை, கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்

கதிரிமங்கலம் ஊராட்சியில்சாலை, கழிப்பறை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Update: 2023-01-22 15:09 GMT

கதிரி மங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர் லலிதா மோகன் குமார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் குமார், தலைமையில் ஊர் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், திட்ட இயக்குனர் ஆகியோரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் கதிரிமங்கலம் ஊராட்சியில் இருக்கும் தனியார் பள்ளியின் பின்புறம் முதல் கதிரிமங்கலம் தலைமைகிராமம் வரை உள்ள தார் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதேபோல் பட்டாளம்மன் கோவில் முதல் புத்தாகரம் செல்லும் வளைவு வரை தார் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்த சாலைகளை புதிதாக அமைத்து தரவேண்டும். கதிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள காந்திபுரத்தில் புதுப்பேட்டை செல்லும் சாலை, பூரிகமாணிமிட்டா ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும். பூரிகமாணிமிட்டா பஞ்சாயத்தில் உள்ள ஓன்றிய நடுநிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறை பழுதடைந்து உள்ளதால் அதனை புதிதாக கட்டி, தண்ணீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், திட்ட இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்