திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்;
திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில் மறியல்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தலைவர் துரைவேலன் தலைமையில் ரெயில் நிலையம் அருகே திரண்ட காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட ஊர்வலமாக சென்றனர். அவா்கள் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கைது
இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் அன்புவீரமணி, துணைத்தலைவர் கலியபெருமாள், நகர தலைவர்கள் அருள், கனகவேல், சாம்பசிவம், எழிழரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
---