சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது வழக்கு

வாய்மேட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-06-08 17:24 GMT

வாய்மேடு, ஜூன்.9-

நாகை மாவட்டம், வேதாரண்யம் பன்னாள் ஊராட்சி பாரதீய ஜனதா கட்சி தலைவர் இளையராஜா. இவர் தி.மு.க.வை பற்றி விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் இளையராஜாவை வாய்மேடு போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து வாய்மேடு கடைத்தெருவில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு, போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே, போலீசாரிடம் அனுமதி பெறாமல் சாைல மறியலில் ஈடுபட்டதாக கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரகுமார், வேதாரண்யம் தெற்கு ஒன்றிய தலைவர் கரு.நாகராஜன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்