சாலை பாதுகாப்பு வார விழா

சிவகாசியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

Update: 2023-01-16 19:31 GMT

சிவகாசி, 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், சிவகாசி போக்குவரத்து போலீசார் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தியது. காரனேசன் பஸ் நிறுத்தம், சிவகாசி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயன், சிவகாசி போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம், திருத்தங்கல் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சப்- இன்ஸ்பெக்டர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்