சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-01-13 20:36 GMT

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வண்ணார்பேட்டையில் நேற்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலாண்மை இயக்குனர் மோகன் தலைமை தாங்கினார். மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மேலாளர்கள் சுப்பிரமணி, சசிகுமார், சங்கரநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணி நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இருந்து தொடங்கி மாநகர பகுதி முழுவதும் சென்றது. இதில், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மோட்டார் சைக்கிளில் செல்வோர் ெஹல்மெட், கார் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்