சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.

Update: 2023-02-16 13:07 GMT

ஆரணி

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பஸ்சில் அமைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர்.

தலைமை ஆசிரியை பா.தாமரைச்செல்வி தலைமையில் அரசு பஸ்சில் கண்காட்சி மூலம் அமைக்கப்பட்டிருந்த சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வுகளை அனைத்து மாணவிகளும் பார்வையிட்டு அதற்கான கருத்துகளையும் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர்.

இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்