சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.;

Update:2023-09-21 00:15 IST

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டராக்ட் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பேசினார். முகாமில் ரோட்டரி மாவட்ட உதவி கவர்னர் முருகேசன், ரோட்டரி சங்க சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு திட்ட இயக்குனர் இளங்கோ ஆகியோர் பேசினர். முடிவில் ரோட்டரி சங்க செயலர் மாதவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்