இரவோடு, இரவாக சீரமைக்கப்பட்ட சாலை

சமயபுரம் கோவில் நுழைவு பகுதியில் இரவோடு, இரவாக சீரமைக்கப்பட்ட சாலை

Update: 2022-07-05 19:45 GMT

சமயபுரம், ஜூலை.6-

சமயபுரம் மாரியம்மன் கோவில் ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் சமயபுரத்தில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவோடு, இரவாக குண்டும், குழியுமாக உள்ள கோவிலின் நுழைவு பகுதியில் உள்ள சாலையை லாரி மூலமாக ஜல்லியை கொண்டு வந்து செப்பனிடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் விழாவிற்கு வந்த பக்தர்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்டோர் பெரும் அவதி அடைந்தனர். இரவோடு, இரவாக செய்வதை தவிர்த்து சில நாட்களுக்கு முன்பாகவே நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டிருக்கலாமே என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்