நகராட்சி பணியாளர்களை கண்டித்து சாலை மறியல்

Update: 2022-05-28 19:01 GMT

தாராபுரம்

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் வினியோகிக்காத குடிநீர் வினியோகிக்கும் பணியாளர்களை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தாராபுரம் நகராட்சி 13-வது வார்டில் சுமார் 2ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலான மக்கள் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் வேலைக்கு காலையில் 8 மணிக்கே சென்று விடுகின்றனர்.

அப்போது காலையில் 7 மணிக்கு தண்ணீர் வினியோகித்தால் அனைத்து குடும்பத்தினரும் தண்ணீரை பிடித்து கொள்வார்கள். ஆனால் இந்த வார்டு பகுதியில் முறையான நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்வதில்லை. முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பஜனைமடத்தெரு அரசு ஆரம்பப் பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறிநகராட்சி பணியாளர்களை கண்டித்து சாலை மறியல்த்து தகவல் அறிந்த தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், ஆணையாளர் ராமர் மற்றும் வார்டு கவுன்சிலர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை பணிகள் காரணமாக பழுதடைந்த குடிநீர் குழாய்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகித்தனர்.

மேலும் வருங்காலத்தில் சரியான நேரத்தில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்