மத்திய அரசின் சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்க திட்டப்பணிகளின் ஒரு கட்டமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற சாலைகளை விரைவாக கண்டறிந்து அதை சுகாதார முறையில் பேணி காக்கும் அடிப்படையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காங்கயம் - தாராபுரம் மெயின்ரோட்டில் உள்ள போலீஸ்நிலையம், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் வியாபார நிறுவனங்கள் உள்ளன. களிமேடு பகுதியில் தனியார் ஒப்பந்தத்தின் மூலம் சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் அதற்கான பணிகள் இதுவரை முறையாக நடைபெறாமல் சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டுவந்தது. இதனால் வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது காங்கயம் போலீஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர், கலெக்டர், தாசில்தார், நகராட்சி தலைவர் ஆகியோருக்கு களிமேடு பகுதி பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது களிமேடு பகுதியில் சாலை விரவாக்கப்பணிகள் மற்றும் நவீனப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.