பொதுமக்களின் எதிர்ப்பை மீறி சாலை அமைக்கும் பணி

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2022-06-25 13:20 GMT

கண்ணமங்கலம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பகுதியில் கமண்டல ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றுக்கு மறுபுறம் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அதில் லிங்காபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலை கமண்டல ஆறு தரைப்பாலம் வழியாக செல்கிறது.

இச்சாலையில் இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் புதிய சாலை அமைக்க முயற்சி மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் நிலம் வைத்துள்ள சிலர், பாதை அமைத்தால் தங்கள் நிலங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கும் என கருதி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே, சுமார் 700 மீட்டர் தூரம் உள்ள இச்சாலையில் தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மக்கள் கோரிக்கையை ஏற்றும், எதிர்ப்பை மீறியும் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

இந்த தகவலை கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கு குவிந்தனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மேற்பார்வையில், ரோடு ரோலர் மூலம் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்