ரூ.71.69 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
பேராவூரணி தொகுதியில் ரூ.71.69 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பேராவூரணி:
தமிழக முதல்-அமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தென்னங்குடி ஊராட்சி தென்னங்குடி பள்ளிக்கூடம் வழியாக செல்லும் பஞ்சு மில் இணைப்பு சாலை, சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில், ரூ.31 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதேபோல், மடத்திக்காடு ஊராட்சியில் ரூ.39.95 லட்சத்தில் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணி தொடங்க நிகழ்ச்சி நடந்தது. இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
இதில், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், வடக்கு ஒன்றியச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட நெசவாளர் அமைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தொண்டரஅணி அமைப்பாளர் மணிவண்ணன், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், மாவட்டக் கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, ஒன்றியக் கவுன்சிலர்கள் ராஜலட்சுமி ராஜ்குமார், அண்ணாதுரை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் குணதா சரவணன் (தென்னங்குடி) சுதாசினி சுப்பையன் (மடத்திக்காடு), மற்றும் பலர் கலந்து கொண்டனர்.