அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2022-07-05 17:43 GMT

மயிலாடுதுறையில் நாராயணபுரம், மாயூரநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறை அருகே மாப்படுகை ெரயில்வே கேட் அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ராயர் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் துரைராஜ், நிர்வாகிகள் ராமலிங்கம், கணேசன், பாலையா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக பூம்புகார்- கல்லணை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்