சாலை மறியல்; கற்கள் வீச்சு
காரியாபட்டி அருகே சாமி தரிசனம் செய்வது ெதாடர்பாக சாலை மறியல் போராட்டம் நடைெபற்றது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே சாமி தரிசனம் செய்வது ெதாடர்பாக சாலை மறியல் போராட்டம் நடைெபற்றது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருேக உள்ள ஒரு ேகாவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் கூறியதாக தெரிகிறது. இதற்கு மற்ெறாரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
கற்கள் வீச்சு
இந்தநிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், மற்றொரு தரப்பினரின் பகுதிகளுக்குள் சென்று கற்களை வீசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இருப்பினும் தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.