இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-30 14:40 GMT

திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் இந்திய கம்

யூனிஸ்டு கட்சியின் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு வட்டக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முத்தையன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்த கூடாது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். வேளாண் உற்பத்திக்கான இலவச மின்சாரம் திட்டத்தை தடுக்கும் மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களாக வங்கிகள், எல்.ஐ.சி., ரெயில்வே, விமானம் போன்றவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசியில் தபால் அலுவலகம் எதிரில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வட்டாரச் செயலாளர் ஏ.ஆரிப் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

வட்டாரத் துணைத்தலைவர் சுப்பிரமணி, நகரச் செயலாளர் அசோகன், ரசூல், நாராயணன், சையது முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் இரா.தங்கராஜ் மாவட்டத் துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த பஸ்சை மறித்து கோஷமிட்டனர். இதில் 20 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்