சாலை மறியல்; கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

அலங்காநல்லூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-13 21:03 GMT

கொட்டாம்பட்டி,


அலங்காநல்லூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்

மேலூரில் உள்ள பென்னிகுவிக் பஸ் நிலையம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்து தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக நேற்று கட்சியின் மாவட்ட துணை செயலாளர் மெய்யர் தலைமையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பஸ் நிலையம் பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

இதனால் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் விலைவாசி உயர்வை கண்டித்து ஊர்வலமாக சென்றனர். இதில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து அரசு வங்கி முன்பு சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமரேசன், ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 110 பேரை அலங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம்

விலைவாசி உயர்வு, நீட் தேர்வை ரத்து செய்ய மறுப்பது, தொழிலாளர் விரோத விவசாய சட்டங்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நேற்று திருமங்கலத்தில் செங்கோட்டை செல்லும் ெரயிலை மறிக்க முயன்றனர். மாவட்ட செயாலாளர் முத்துவேலு தலைமையில் அக்கட்சியினர் வந்தனர். அவர்களை ெரயில் நிலையம் அருகே திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலுக்கு வந்தவர்களை கைது செய்தனர். இந்த மறியலில் திருமங்கலம் தாலுகா செயாளர் நல்லகுரும்பன், விவசாய அணிசெயலாளர் நாகஜோதி, துணைசெயலாளர் செய்யது, மாவட்ட குழு சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்