மது விற்பனையை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-04-17 18:48 GMT

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், சிறுகுடல் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்களில் பலர் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று காலை திடீரென்று பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்ட விரோதமாக மது விற்பவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அப்போது அவர்கள் கூறுகையில், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்