விடுதி காப்பாளரை மீண்டும் பணியமர்த்த கோரி பள்ளி மாணவிகள் சாலை மறியல்

பழனி அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட விடுதி காப்பாளரை மீண்டும் பணியமர்த்த கோரி பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-17 15:22 GMT

பழனி

பழனி அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட விடுதி காப்பாளரை மீண்டும் பணியமர்த்த கோரி பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள ஆதி திராவிட நலத்துறை விடுதியில் சில மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறி, அமுதா, விஜயா ஆகிய இருவரை கடந்த மாதம் பணி நீக்கம் செய்தனர்.

இந்த நிலையில், அமுதா என்ற விடுதி காப்பாளரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனக் கோரி 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாராபுரம் ரயில்வே கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்