பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

பஸ் வசதி கேட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-27 17:44 GMT

2 தினங்களாக பஸ் வரவில்லை

கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்ச பேட்டை கிராமம் தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், தெத்துவாசல் பட்டி பிரிவு சாலையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மஞ்ச பேட்டை கிராமத்திற்கு பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகளை ஏற்றி செல்வதற்கு காலை, மாலை ஆகிய இரு ேவளைகளில் தஞ்சாவூரில் இருந்து அரசு பஸ் வருவது வழக்கம்.

ஆனால் கடந்த 2 தினங்களாக இந்த பஸ் வராத காரணத்தினால் இந்த பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கடந்த 2 தினங்களாக பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் தெத்துவாசல் பட்டி பஸ் நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு மாணவ- மாணவிகள் காத்திருந்தனர். ஆனால் இந்த வழியாக வந்த அனைத்து புறநகர் பஸ்களும் அங்கு நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதன் பேரில் சாலை மறியலை மாணவ-மாணவிகள் கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்