சாராய விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-10-10 18:45 GMT

மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாராய விற்பனை

மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனை நடந்துவருகிறது. பலமுறை போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சாராய விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காததால் காந்தி ஜெயந்தி அன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் சாராய விற்பனையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாலை மறியல்

இதை தொடர்ந்தும் சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காததால், நேற்று மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் முக்கிய சாலையில், கபிலன் என்பவரின் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்களை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்