பொன்னன்விடுதியில் சாலை மறியல்
பொன்னன்விடுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன் விடுதி பகுதியில் கிராவல் மண் அள்ளி வந்த டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் உரிமம் பெற்றே கிராவல் மண் அள்ளியதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆலங்குடி சாலையில் டிராக்டர்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.