அஞ்செட்டி அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
அஞ்செட்டி அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே நாட்ராம்பாளையம் ஊராட்சி கேரட்டி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய உதவிப்பொறியாளர் எழில்மாறன், அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு நாளில் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.