அஞ்செட்டி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்

அஞ்செட்டி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2022-06-15 22:46 IST

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர் மின்வெட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள நாட்ராம்பாளையம் கிராமத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. இதனால் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கிராமமே இருள் சூழ்ந்து காணப்பட்ட பெண்கள் வெளியே நடமாட முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்தநிலையில் தொடர் மின்வெட்டை கண்டித்து நேற்று கிராம மக்கள் சாலையின் நடுவே கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்செட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் உறுதி

அப்போது நாட்ராம்பாளையம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் கிராமம் இருளில் மூழ்குவதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்