ஆந்திராவை சேர்ந்த வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆந்திராவை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தாா்.

Update: 2023-05-20 21:57 GMT

வல்லம்;

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்பல்லோ நாயுடு மகன் சந்தோஷ்(வயது28). இவர் தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் தங்கி இருந்து சாலை அமைக்கும் கம்பெனியில் சாலை போடும் பணியில் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் சந்தோஷ் அவருடைய மோட்டார் சைக்கிளில் டீ குடிப்பதற்காக செங்கிப்பட்டிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் செங்கிப்பட்டி- கந்தர்வக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்த போது எதிரே செங்கல்பட்டியில் இருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்தோஷ் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். 

Tags:    

மேலும் செய்திகள்