முருங்கமரத்தரசு கிராமத்தில் ரூ.2½ கோடியில் தார்சாலை

Update: 2023-01-02 18:45 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள வட்டுவனஅள்ளி ஊராட்சி முருங்கமரத்தரசு கிராமத்தில் தும்பல் கொல்லை வழியாக பவளந்தூர் வரை சுமார் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி தலைமை தாங்கி, பூமிபூஜை செய்து தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் தமிழ் பெரியசாமி, வார்டு உறுப்பினர் மண்ணநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்