சாலையோரம் சாய்ந்து கிடக்கும் 'மைல்கல்'

உடுமலை அருகே சாலையோரம் மைல் கல் சாய்ந்து கிடக்கிறது

Update: 2022-07-22 18:50 GMT


ஒரு இடத்தில் இருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்வதற்கு எத்தனை கி.மீ.தூரம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக சாலையோரங்களில் 'மைல்கல்'என்ற கல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடப்பட்டிருக்கும். அதன் மூலம், வாகனங்களில் செல்கிறவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அந்த 'கல்'லில் எழுதப்பட்டுள்ளதைப்பார்த்து, தாங்கள் செல்லும் ஊருக்கு இன்னும் எத்தனை கி.மீ.தூரம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் உடுமலையில் இருந்து பழனிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரியகோட்டை பிரிவை அடுத்துள்ள தந்தை பெரியார் சமத்துவபுரம் அருகே, அந்த இடத்தில் இருந்து மடத்துக்குளத்திற்கு 9 கி.மீ.தூரம் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் எழுதப்பட்டு சாலையோரம் நடப்பட்டிருந்த 'மைல்கல்' சாய்ந்த நிலையில் உள்ளது. அதை சுற்றிலும் செடிகள் வளர்ந்து, அந்த கல் இருப்பதே தெரியாத அளவிற்கு உள்ளது. அந்த மைல்கல்லை, அனைவரது பார்வையில்படும்படி நட்டு வைக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்