ஆர்.கே. பேட்டையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவதுபோல் ரூ.70 ஆயிரம் 'அபேஸ்' - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஆர்.கே. பேட்டையில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ரூ.70 ஆயிரம் ‘அபேஸ்’ செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-10-15 08:49 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் கே.பி.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் நாதன் (வயது 46). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆர்.கே.பேட்டை- பள்ளிப்பட்டு ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் அவருக்கு உதவுவது போல் நடித்து அவரிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை நைசாக திருடிக்கொண்டு தன்னிடம் ஏற்கனவே வைத்திருந்த ஒரு கார்டை அவரிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் நாதனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்