பூம்புகாருக்கு காவிரி நீர் வந்தடைந்தது

கடைமடை பகுதியான பூம்புகாருக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-06-23 19:00 GMT

திருவெண்காடு,

கடைமடை பகுதியான பூம்புகாருக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர்

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடும் வகையில் கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.இந்த நிலையில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களை கடந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாருக்கு காவிரி நீர் வந்தது.

கடைமடை

காவேரி ஆற்றின் கடைமடை பகுதியில் கடைசி அணையான மேலையூர் சட்ரஸ் பகுதியில் உள்ள அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பல்வேறு வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்பட உள்ளது. பூம்புகார் மற்றும் திருவெண்காடு பகுதிக்கு காவிரி நீர் வந்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கடலோடு கலக்கும் இடமான பூம்புகார் சங்கமத்துறையின் வழியாக கடலில் கலப்பது சம்பிரதாயமான நிகழ்வாக பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு அதனை செய்யாதது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்