டிராக்டரில் ஆற்றுமணல்கடத்திய 3 பேர் கைது
விளாத்திகுளம் அருகே டிராக்டரில் ஆற்றுமணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே ஜமீன்செங்கல்படை கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசோலை தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜமீன் செங்கல்படை கிராமத்தில் ஊருக்கு அருேக சிலர் சட்டவிரோதமாக திருடி குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை டிராக்டரில் ஏற்றி கடத்தி சென்று கொண்டிருந்தனர். அந்த டிராக்டரை மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜமீன்செங்கல்படை கீழத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 26), சண்முகராஜ் (50), தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.