பன்றிகளால் சுகாதார சீர்கேடு; தொற்று நோய் ஏற்படும் அபாயம்

திருக்கடையூர் பகுதியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு; தொற்று நோய் ஏற்படும் அபாயம் பொதுமக்கள் அச்சம்;

Update: 2022-07-07 16:49 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர் பகுதியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

திருக்கடையூர்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்திபெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.இந்தநிலையில் பஸ் நிலையத்தின் பின் பகுதி, சன்னதி தெரு, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம், மேலவீதி, கீழவீதி, கடைத்தெரு, பெருமாள்கோவில்தெரு, அபிஷேக கட்டளை, ஒடக்கரை, பிச்சகட்டளை மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் பன்றிகள் அதிகளவில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

பொதுமக்கள் அச்சம்

மேலும் இங்குள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள், வீடுகளை சுற்றியும் பன்றிகள் சுற்றித் திரிவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா நோய் தொற்று பரவி வருகிறது. இந்தநிலையில் திருக்கடையூரில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.இருசக்கர வாகனங்களில் செல்லும்போது பன்றிகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே திருக்கடையூர் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்