தேங்கி நிற்கும் கால்வாய் நீரால் நோய் பரவும் அபாயம்
காவனூர் காலனியில் தேங்கி நிற்கும் கால்வாய் நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியம் காவனூர் காலனியில் கழிவு நீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் நோய் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.