கூடலூாில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்-பொதுமக்கள் அவதி

கூடலூர் துப்புகுட்டிபேட்டையில் சாலையில் வழிந்தோடும் இறைச்சி கழிவுகள், கழிவுநீரால் நோய் பரவும் போயம் ஏற்பட்டு உள்ளதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2023-07-27 19:00 GMT

கூடலூர்

கூடலூர் துப்புகுட்டிபேட்டையில் சாலையில் வழிந்தோடும் இறைச்சி கழிவுகள், கழிவுநீரால் நோய் பரவும் போயம் ஏற்பட்டு உள்ளதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இறைச்சி கழிவுநீர்

கூடலூர் துப்புகுட்டிபேட்டை கல்குவாரி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான மாடு வதைக்கூடம் உள்ளது. இங்கிருந்து கூடலூர் நகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இறைச்சிகள் கொண்டு செல்லப்படுகிறது. இதை சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த நிலையில் கூடலூரில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் வாய்க்கால்களில் குப்பை கழிவுகள் உள்ளிட்ட பொருள்கள் தண்ணீரில் அடித்து செல்கிறது. இதேபோல் நகராட்சி வதை கூடத்தில் உள்ள ரத்தம் உள்ளிட்ட இறைச்சி கழிவுகள் சாலையில் வழிந்தோடுகிறது. இதேபோல் தினமும் கழிவுகள் மழை நீரில் செல்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ- மாணவிகள் முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினரும் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.

பொதுமக்கள் அவதி

மேலும் கடும் துர்நாற்றமும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து நகராட்சி சுகாதார துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

நவீன வதை கூடத்தில் இருந்து தினமும் இறைச்சி கழிவுகள் மழை நீரில் கலக்கும் வகையில் வெளியேற்றப்படுகிறது. இதனால் குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல முடிய வில்லை.

மேலும் எந்த நேரமும் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் வீடுகளில் சிரமத்துடன் இருக்க வேண்டியதாக உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்