வேகத்தடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

வேகத்தடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-01-18 18:30 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டிக்கு தெற்கே பெரிய திருக்கோணம் செல்லும் முதன்மை சாலை அமைந்துள்ளது. இந்தசாலை வழியாக செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அந்த சாலையில் 7 இடங்களில் கடந்த ஆண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. அந்த வேகத்தடைகளில் இதுநாள் வரை வெள்ளை நிற பட்டைகளும், சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடையும், சாலையும் ஒரே மாதிரி இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்