பூந்தமல்லி- அரக்கோணம் சாலையில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

பூந்தமல்லி- அரக்கோணம் சாலையில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update:2023-03-19 18:18 IST

பூந்தமல்லியில் இருந்து அரக்கோணம் செல்லும் நெடுஞ்சாலையில் விஸ்வநாதபுரம், காந்தி பேட்டை, உளுந்தை, மப்பேடு, சமத்துவபுரம், உசேன் நகரம் போன்ற பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே கால்நடைகள் படுத்து ஓய்வெடுக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி வாகனத்தை கால்நடைகளின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் கால்நடைகளுக்கும் காயம் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையில் படுத்து கிடப்பது தெரியாததால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. எனவே பூந்தமல்லி அரக்கோணம் சாலையில் மேற்கண்ட பகுதியில் சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் கால்நடைகளை பிடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்