ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-07-01 14:40 GMT

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடந்தது. பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜன், அமிர்தம் ராஜேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி வரவேற்றார்.

கூட்டத்தில் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, ஒவ்வொரு மாதமும் ஒன்றியக்குழு மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் அறிக்கை புத்தக வடிவில் உறுப்பினர்களுக்கு வழங்கவேண்டும் என உறுப்பினர்கள் மூலம் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அனுமதி அளித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செந்தில்முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்