தென்காசி மாவட்டத்தில் அரிசி ஆலை, கடைகள் அடைப்பு

மத்திய அரசின் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டத்தில் அரிசி ஆலை, கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தது.

Update: 2022-07-16 15:56 GMT

பாவூர்சத்திரம்:

மத்திய அரசின் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டத்தில் அரிசி ஆலை, கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தது.

ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு

மத்திய அரசு அத்தியாவசிய உணவு பொருளான அரிசி, கோதுமை மற்றும் உணவு தானியங்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது. இது சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது.

மத்திய அரசு இந்த உத்தரவை திரும்ப பெற கோரி அரிசி ஆலைகள், அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் அரிசி சில்லரை கடைகள் அனைத்தும் ஒரு நாள் கடையடைப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்தில் நேற்று அரிசி ஆலைகள், கடைகள் மூடப்பட்டு இருந்தது.

தென்காசி மாவட்டம்

அதுபோல் தென்காசி மாவட்டத்திலும் கடைகள், ஆலைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் உள்ள சுமார் 130 அரிசி ஆலைகள், மொத்த அரிசி விற்பனை கடைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சில்லரை அரிசி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து இருந்தனர் என்று தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் சி.அன்பழகன் தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்