கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

Update: 2023-04-30 19:00 GMT

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன்அரிசி, சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வேப்பனப்பள்ளி- ஜங்கிரிப்பள்ளி சாலையில் மணவாரனப்பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

2 டன் அரிசி பறிமுதல்

அப்போது சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 41 மூட்டைகளில் தலா 50 கிலோ எடையில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.

விசாரணையில் அந்த அரிசி கங்கலேரி, கங்கலேரி கூட்டு ரோடு, வடுகம்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் வாங்கி கர்நாடகாவில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது-

இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தாளப்பள்ளி அருகே திருச்சிப்பட்டியை சேர்ந்த அரிசி மற்றும் வாகனத்தின் உரிமையாளர் மாரிமுத்து (21), செம்படமுத்தூரை சேர்ந்த லட்சுமணன் (27), மற்றும் 17 வயது சிறுவன் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்