காரிமங்கலத்தில் 21 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் 2 பேர் மீது வழக்கு

காரிமங்கலத்தில் 21 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் 2 பேர் மீது வழக்கு

Update: 2022-11-03 18:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் சில இடங்களில் ரேஷன் அரிசி கள்ளச்சந்தையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவிட்டார்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள்மோகன், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக காரிமங்கலம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வாணிதெரு அருகில் சுமார் 50 கிலோ எடையுள்ள 21 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக அங்கு ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில் தொடர்புடைய காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (வயது 30), முருகானந்தம் (35) ஆகிய 2 பேர் மீது தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்