நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-10-31 18:45 GMT

நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

ரேஷன் அரிசி

நாமக்கல் ராமாபுரம் புதூரை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 33). இவர் வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதாக நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மனோஜ்குமார் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், வீட்டில் 32 மூட்டைகளில் பதுக்கி வைத்து இருந்த 1,280 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மனோஜ் குமாரை குடிமைபொருள் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.

கூடுதல் விலைக்கு விற்பனை

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் ராமாபுரம் புதூர் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து குறைவான விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநில தொழிலாளர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்