கர்நாடக மாநிலத்துக்குகாரில் கடத்த முயன்ற 1.8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் கைது
குருபரப்பள்ளி:
கர்நாடக மாநிலத்துக்கு காரில் கடத்த முயன்ற 1.8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன தணிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார் குருபரப்பள்ளி- சின்னகொத்தூர் சாலையில் உள்ள நெடுஞ் சாலை கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 40 கிலோ எடை கொண்ட 45 பைகளில் 1.8 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியுடன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
மேலும் அரிசியை கடத்தி வந்த எட்ரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த டிரைவர் வேலாயுதம் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் குருபரப்பள்ளி, சோமநாதபுரம், குரும்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடு, வீடாக சென்று குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்ய கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்.க்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.