சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு

சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசினை மேயர் சங்கீதா இன்பம் வழங்கினார்.

Update: 2023-01-26 19:06 GMT

சிவகாசி, 

சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசினை மேயர் சங்கீதா இன்பம் வழங்கினார்.

குடியரசு தினவிழா

குடியரசு தினவிழாவையொட்டி சிவகாசியில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய 14 பேருக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ஆனந்தராஜ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மேயர் சங்கீதா இன்பம் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் சேவுகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் டாக்டர் கதிரவன், ராஜேஷ், சாமுவேல், அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண் டனர்.

யூனியன் அலுவலகம்

சிவகாசி யூனியனில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் யூனியன் தலைவர் முத்துலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தாசில்தார் சாந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், மாரனேரி, எம்.புதுப்பட்டி, அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி, தீயணைப்புநிலையம், ரெயில் நிலையம், சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற குடியரசுதினவிழாவில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்