எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' பட்டம்: சீமான் விமர்சனம்

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் பட்டம் வழங்கப்பட்டது.

Update: 2023-08-25 10:41 GMT

திருச்சி,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து சீமான் கூறுகையில், "எனக்கு தெரிந்தவரை புரட்சி தமிழர் நடிகர் சத்யராஜ் மட்டுமே. நடிகர் சத்யராஜ் மட்டுமே புரட்சித் தமிழன் பட்டத்திற்கு உரியவர்.

எல்லோரும் தங்கள் பெயருக்கு முன் புரட்சியை சேர்ப்பதால் புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் மதுரை மாநாடு அரசியலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது." என்று அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்