கடலூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழை, எளிய மக்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கே.எஸ். சம்பந்தம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் மாவட்ட செயற்குழு நிர்வாகி ராதாகிருஷ்ணன், தொழிற்சங்கம் தனசேகர், ஐக்கிய மகளிர் சங்கம் செல்வி, மாவட்டக்குழு நாகராஜன், ஏழுமலை, இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.