பூந்தமல்லியில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

பூந்தமல்லியில் புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2022-06-08 11:39 GMT

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புரட்சி பாரதம் கட்சியினர் பல்வேறு போலீஸ் நிலையங்களில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி மீது புகார் அளித்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று பூந்தமல்லியில் தி.மு.க. சார்பில் நடந்த பொது கூட்டத்திற்கு ஐ.லியோனி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள வந்தார். இதுபற்றி தகவலறிந்த புரட்சி பாரதம் கட்சியினர் மாநில முதன்மை செயலாளர் ருசேந்துரகுமார், பரணி மாரி ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு நடந்து வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து புரட்சி பாரதம் கட்சியினர் கலைந்து சென்றனர். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்