குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததை கண்டித்துபுரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-01-11 18:45 GMT


புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த நபர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியினர் கடலூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் முகேஷ் மூர்த்தியார் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர்கள் பாலவீரவேல், சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர்.

இதில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் விக்கிதுரை, மாவட்ட துணை செயலாளர் கந்தன், துணை தலைவர் செல்வநாதன், மாவட்ட மகளிர் அணி லட்சுமி, நிர்வாகிகள் சக்திவேல், கமலக்கண்ணன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நகர பொருளாளர் புஷ்பராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்