தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறையில் தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-01-13 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலாண்டு மற்றும் அரையாண்டு பொதுத்தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் குறித்து தொடர்ந்து 3-வது நாட்களாக விரிவான ஆய்வு கூட்டம் தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் முதலிடம் பிடிக்க வேண்டும். அதற்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒரு சேர பணியாற்றி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். பொது தேர்வில் மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்பில் என்ன உதவிகள் கேட்டாலும் அதை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இதுபோன்ற ஆய்வு கூட்டம் இனி வாரந்தோறும் நடத்தப்படும். மாணவர்கள் மதிப்பெண்களை வைத்து பாடவாரியாக ஆய்வு செய்யப்படும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்