சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம் - அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

Update: 2022-12-17 15:28 GMT

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாகவும், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்