அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-08-23 14:36 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் முன்னிலை வகித்தார்.

அரசு முதன்மைச் செயலாளரும், வணிகவரித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப்பணிகள் சிறப்பான முறையில் செயல்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஏற்கனவே செயல்படுத்தி வரும் அரசின் திட்டப்பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும்.

பண்ணைக்குட்டைகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர முனைப்புடன் செயல்பட வேண்டும். வடகிழக்கு பருவ மழையினை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

தமிழக அரசின் முக்கிய திட்டப்பணிகளை கூடுதல் கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரசின் திட்டங்கள்

தொடர்ந்து வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செயலாக்கம், பணிவிவரம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2 குறித்தும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அதற்கான பணி விவரங்களை கேட்டறிந்தார்.

இதையடுத்து வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையினருடன் அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சிறுபால பணியினை ஆய்வு

ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வேங்கிக்கால் ஏரியின் சிறுபால பணியினை நேரில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் துரிஞ்சாபுரம் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வட்டார நாற்றாங்கால் அமைக்கும் பணி, அடர்ந்த மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் வேளாண்மை விதைப் பண்ணை அமைக்கும் பணியினையும், உற்பத்தி முறையினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வள்ளிவாகை ஊராட்சியில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சையத்சுலைமான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், உதவி கலெக்டர்கள் வெற்றிவேல், வினோத்குமார், தனலட்சுமி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்